த்ரிஷா நடிக்கும் புதிய படம் - லேட்டஸ்ட் தகவல்!

Film Motion
சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து இருப்பவர் நடிகை த்ரிஷா. பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நிற்கும் த்ரிஷா, இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது, த்ரிஷா 'பரமபதம் விளையாட்டு' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகிறது.

த்ரிஷா நடிக்கும் புதிய படம் - லேட்டஸ்ட் தகவல்! Trisha45455-03-1509694318

'பரமபதம் விளையாட்டு' படத்தின் படப்பிடிப்பு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் நடக்கிறது. இங்கு 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ப்ரேம் எடிட்டராக பணியாற்றுகிறார். ஆற்காட்டில் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்தபிறகு, இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் இடைவெளி இன்று நடத்தப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES