மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி பற்றி பேசியது அவ்வளவு பெரிய குத்தமா என்ன?: பாஜக எம்.பி.

Film Motion
மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி பற்றி பேசியது அவ்வளவு பெரிய குத்தமா என்ன?: பாஜக எம்.பி. 31-1509427326-shatrughan-sinha-600-jpg

மும்பை: விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா. மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்திரராஜன், ஹெச். ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து முன்னாள் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கூறியிருப்பதாவது,

ஜி.எஸ்.டி., மருத்துவம் பற்றி நியாயமான கேள்விகளை எழுப்பிய தமிழ் படத்தை எதற்காக இவ்வளவு எதிர்க்க வேண்டும். சமூக-அரசியல் பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை நடிகர்களுக்கு உண்டு. பவர்ஃபுலான தமிழ் நடிகரான விஜய் நம் நாட்டு ஏழை மக்களுக்கு நல்ல மருத்துவம் தேவை என்பதை நினைவூட்டியது அவ்வளவு பெரிய குற்றமா? மெர்சல் பற்றி பிரதமரோ, பாஜக மூத்த தலைவர்களோ யாராவது கருத்து தெரிவித்து பார்த்தீர்களா?

பிறரை விட நாங்கள் தான் விசுவாசமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ள பாஜகவில் உள்ள சிலர் செய்த வேலை தான் மெர்சல் பிரச்சனை. அவர்கள் தான் படத்தில் நியாயமாக கேட்ட விஷயங்களை கண்டித்து குதித்துள்ளனர். விஜய்யை விமர்சித்து கேள்வி எழுப்புவதற்கு பதிலாக அவர் பேசியதை வார்த்தைகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு நாட்டின் மருத்துவ துறையை மேம்படுத்தலாம்.

பண மதிப்பிழப்பு தவறு என்பதை நாம் பெருந்தன்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். பண மதிப்பிழப்பு சரியில்லை என்று முதலில் சுட்டிக்காட்டியவர்களில் நானும் ஒருவன். பலர் வேலை இழந்துள்ளனர், பலர் சேமிப்பை இழந்துள்ளனர். நம் தவறுகளை ஏற்றுக் கொண்டு அவற்றை வாபஸ் பெற வேண்டும். மன்னிப்பு கேட்பதற்கு வெட்கப்படக் கூடாது. ஜனநாயகத்தில் நடக்கும் சில விஷயங்களை சுட்டிக் காட்டும் நடிகர், நடிகைகளை எதிர்க்காமல், பாராட்ட வேண்டும். அமர், அக்பர், அந்தோணியிடம் இருந்து வரும் நியாயமான விமர்சனங்களை ஏற்க வேண்டும்.

ஓவர் பொறாமை பிடித்த என் கட்சி உறுப்பினர்கள் சிலரால் மெர்சல் படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. மெர்சல் தயாரிப்பாளர்கள் பாஜகவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் சத்ருகன் சின்ஹா.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES