LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

New Member••• 1
Film Motion

Film Motion
Film Motion

Film Motion


31/10/2017, 9:41 pm

சென்னை: மத்திய மாநில அரசுகள் கூடச் செய்யாததை விவசாயிகளுக்கு இந்த மழை செய்து வருகிறது என்றார் இயக்குநர் ரா பார்த்திபன். 6 அத்தியாயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசுகையில், "மழை வணக்கம். மத்திய அரசு செய்ய வேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்குச் செய்யும் மா மழைக்கு என் நன்றிகள்.

2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை.
6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஷயம் உள்ளவர்களை பார்த்தால்தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன். தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்," என்றார்
மத்திய மாநில அரசுகள் செய்யாததை விவசாயிகளுக்கு செய்த மாமழை! - பார்த்திபன்

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum