இதெல்லாம் தெரிஞ்சா ஃபேஸ்புக் லாக்-இன் பண்ண யோசிப்பீங்க!

Film Motion
அம்மா, அப்பாவுடன் பேசாமல் கூட இருந்துவிடுவோம். ஆனால், ஃபேஸ்புக் லாக்-இன் செய்யாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற நிலையில் வாழும் கோடான கோடி ஜீவன்கள் நமது உலகில் இருக்கிறார்கள். மார்க் விளையாட்டாக ஆரம்பித்த ஒரு இணையத்தளம் இன்று உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் சரியாக ப்ரமோஷன் செய்தால் போதும், ஒரு நாட்டில் ஆட்சியை கூட மாற்றி அமைத்துவிடலாம் என்ற அளவில் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு நாளுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டும் ஃபேஸ்புக்கின் சர்வர் ஒரு நிமிடம் டவுன் ஆனாலும் பல ஆயிரம் டாலர்கள் இழப்பு நேரிடும். தான் ஈட்டும் பணத்தில் இருந்து, உலகில் சமூக அமைப்புகளுக்கு மட்டும் மார்க் ஒரு பில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார்.

ஒரு நாளுக்கு ஆறு இலட்சம் முகநூல் அக்கவுண்டுகள் ஹேக் செய்ய முயற்சிக்கப்படுகின்றன. இதை ஃபேஸ்புக் நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு நாளுக்கு ஃபேஸ்புக்கை நூறு கோடி பேர் லாக்-இன் செய்கிறார்கள். இதில் குறைந்தபட்சம் ஆறு இலட்சம் பேருடைய அக்கவுண்டை ஹேக் செய்ய ஹேக்கர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த தகவல் ஃபேஸ்புக் பயனாளிகளை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தங்களை ஃபேஸ்புக்கில் நட்பில் இருந்து நீக்கிய (UnFriend) காரணத்திற்காக கொலை செய்த நபர்களும் இருக்கிறார்கள். டென்னிசியை சேர்ந்த ஆண் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஃபேஸ்புக் தளத்தில் தனது முப்பது வயது மகளை நட்பில் இருந்து நீக்கிய காரணத்திற்காக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆணை போலீஸ் கைது செய்தனர். இவருக்கு பெயில் அளிக்க இரண்டு இலட்சம் டாலர்கள் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இதை நீங்களே அறிந்திருக்கலாம். நீங்கள் ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திற்கு சென்று வந்தால், உங்கள் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் அது மறுக்கா, மறுக்கா வந்து தொல்லை செய்துக் கொண்டே இருக்கும். ஆம்! ஃபேஸ்புக் நீங்கள் எந்தெந்த தளங்களுக்கு சென்று வருகிறீர்கள் என்பதை டிராக் செய்யும். இதற்கு நீங்கள் லாக்-இன் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு கலர் பிளைன்ட். இவருக்கு நீல நிற சாயங்கள் மட்டுமே கண்களுக்கு தெரியும். சிவப்பு மற்றும் பச்சை நிற கலவைகள் கண்களுக்கு தெரியாது. எனவே, நீல நிறத்தை அடிப்படையாக கொண்ட வண்ணங்களை மட்டுமே இவரால் காண முடியும். இதன் காரணத்தாலேயே ஃபேஸ்புக் நீல நிற கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் நூறு கோடி அக்கவுண்டுகள் இருக்கிறது எனில், அதில் இலட்சக்கணக்கான போலி கணக்குகளும் இருக்கும். இதே போல, இறந்தவர்களுடைய அக்கவுண்டு மட்டுமே முப்பது இலட்சத்திற்கும் மேல் இருக்கிறதாம். முதலில் இவை எந்த பயன்பாடும் இன்றி இருந்தது. இப்போது இறந்தவர்களின் அக்கவுண்டுகள் நினைவுகூரும் வகையில் மாற்றிவிடுகிறது ஃபேஸ்புக். அதே போல ஒருவர் இறந்த பிறகு, அவரது ஃபேஸ்புக் முகவரியை யார் பயன்படுத்த வேண்டும் என்ற பயனும் அளிக்கிறது ஃபேஸ்புக்.

அமெரிக்காவில் விவாகரத்துக்கு முறையிடும் தம்பதிகளில் மூன்றில் ஒருவர் அதன் காரண பட்டியலில் ஃபேஸ்புக் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என தெரியவருகிறது. மேலும், அமெரிக்காவின் விவாகரத்து வழக்கறிஞர்கள், விவாகரத்து கோரும் தம்பதிகளில் 80% பேர் சமூக தளத்தை ஒரு காரணமாக கொண்டுள்ளனர் என்றும் கூறுகிறார்கள். 2011ல் நடந்த ஒருசர்வேவில் இந்த தகவல் அறியவந்தது.

பிளாகர் ஒருவர், தான் ஃபேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம், தன்னை ஓங்கி ஒரு அறைய ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். இவர் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்தவர். இவரது பெயர் மனீஷ் சேதி. தான் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்றவற்றில் அதிக நேரம் செலவழிப்பதால் வேலையில் கவன சிதறல் ஏற்படுகிறது என்ற காரணம் கூறி, அந்த பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

தன்னை தானே போலி கணக்குகள் மூலம் கேலி செய்துக் கொண்ட காரணத்திற்காக மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த மைக்கல் சாம்ப் எனும் பெண்ணுக்கு இருபது மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர் ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் துவக்கி, தனக்கு தானே ஆபாசமாக, கேலி, கிண்டல் செய்து கொண்டு, போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

மொபைல் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக உறவில் விரிசல் விழுகிறது என நாம் அதிகம் படித்திருப்போம். அதற்கு இதும் கூட காரணமாக இருக்கலாம். பிரிட்டனில் 5% பேர் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 15 சதவீதம் பேர், செக்ஸ் வைத்துக் கொள்ளும் கால் பேசுவோம், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

2004ல் ஃபேஸ்புக் துவங்கிய போது, தனது தளத்திற்கு வந்து தங்கள் சுய விவரங்களை பகிர்ந்துக் கொண்ட ஆரம்பக் காலக்கட்ட பயனாளிகளை மார்க் ஜுக்கர்பெர்க், "முட்டாள்கள் எப்படி இங்கே தங்கள் சுய விவரங்களை பகிர்கிறார்கள்..." என கேட்டாராம். ஹ்ம்ம் இப்போது அனைவரின் பர்சனல் டைரியாக மாறிவிட்டது ஃபேஸ்புக். மார்க் ஜுக்கர்பெர்க்கும் உலகின் முதன்மை பணக்கார பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.

2005ல் மை ஸ்பேஸ் என்ற நிறுவனம் (ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளம்) ஃபேஸ்புக்கை வாங்க முன்வந்தது. ஆனால் அப்போது மார்க் ஜுக்கர்பெர்க் கேட்ட 75 மில்லியன் டாலர் பெரிய தொகை என மறுத்து திருப்பி அனுப்பியது. இப்போது மை ஸ்பேஸ் காணாமல் போய்விட்டது. மார்க் ஜுக்கர்பெர்க் உலகம் அறிந்த பிரபலமாகிவிட்டார். (வாழ்க்கை இரு வட்டம்ன்னு இத தான் சொல்றாங்களோ)

2014ல் திருடன் ஒருவன் தனது இருப்பிடத்தில் இருந்து ஃபேஸ்புக் லாக்-இன் செய்துவிட்டு, லாக்-அவுட் செய்ய மறந்த காரணத்தால் கைது செய்யப்பட்டார். அந்த திருடனின் பெயர் மினசோட்டா. தனது வீட்டில் இருந்த இவர் வீட்டு கணினியில் லாக்-இன் செய்து, அதை மறந்து அப்படியே விட்டுவிட்டார். இவர் லாக்-இன்'ல் இருப்பதை கண்டுப்பிடித்து, இருப்பிடம் அறிந்து வந்து போலீஸ் கைது செய்தனர்.

நீங்கள் பதிவிடும் எந்த ஒரு ஸ்டேடஸ்-களும், நீங்கள் போஸ்ட் பட்டனை கிளிக் செய்யவில்லை எனிலும் கூட, ஃபேஸ்புக் சர்வரில் சேமிப்பாகிவிடும். அந்த ஸ்டேடஸ் பாக்ஸில் தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் தவறுதலாக / உண்மை தகவல் எதை டைப் செய்தாலும், ஆட்டோமேட்டிக்காக அந்த பாக்ஸில் பதிவான எழுத்துகள் அனைத்தும் ஃபேஸ்புக் சர்வருக்கு சென்றுவிடுகிறது.

எப்படி மார்க்கிடம் இருந்து மை ஸ்பேஸ் ஒருமுறை பல்பு வாங்கியதோ, அதே போல மார்க்கும் வாட்ஸ்-அப் நிறுவனர் பிரயான் ஆக்டனிடம் ஒருமுறை பல்பு வாங்கியுள்ளார். 2009ல் பிரயான் வேலை கேட்டு ஃபேஸ்புக் சென்றார். ஆனால், அவரை தேர்வு செய்யவில்லை ஃபேஸ்புக். இந்த சம்பவம் நடந்த ஐந்தே ஆண்டுகளில் ஃபேஸ்புக் வாட்ஸ்-அப் செயிலியை 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது.

ஃபேஸ்புக் ஹேக்கர் கப் என்ற கோடிங் போட்டியை நடத்தியது. இந்த கோப்பையை முதன் முதலில் வென்றவர் ஒரு கூகுல் பணியாளர். அந்த கூகுல் பணியாளர் மிக பெருமையாக ஃபேஸ்புக் தலைமையிட அலுவலகத்திற்கு கூகுல் பேட்ச் அணிந்தபடி கெத்தாக சென்று பரிசு பணத்தை வாங்கி வந்தார்.

ஃபேஸ்புக்கில் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட பிள்ளை பேறு விடுமுறை இருக்கிறது. ஆம்! குழந்தை பிறந்தால் ஆண்களுக்கு நான்கு மாத சம்பளத்துடனான விடுமுறை அளிக்கிறது ஃபேஸ்புக்.

ஒரு மனிதனின் ஒரு கிராம் மரபணுவில், கூகுல் மற்றும் ஃபேஸ்புக்கின் மொத்த டேட்டாவையும் சேமித்துவிடலாம் என கூறப்படுகிறது. ராபர்ட் கிராஸ் எனும் நபர் நமது மரபணுவில் டேட்டாவை சேமிக்கலாம் என்றும். நாம் எண்ணுவதை விட அதிகமாக, அதாவது விக்கிபீடியா அல்லது ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இருக்கும் ஒட்டுமொத்த டேட்டாவை பத்து கிராம் மரபணுவில் சேமித்துவிடலாம் என கூறியிருந்தார்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES