ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 25000 டாலர்கள் வழங்கிய ஏஆர் ரஹ்மான்!

avatar
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 25000 டாலர்கள் வழங்கிய ஏஆர் ரஹ்மான்! Rahman2-29-1509266385

டொரன்டோ: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்காக 25000 டாலர்களைக் கடந்த வாரம் தனது இசை நிகழ்ச்சியின்போது வழங்கியிருக்கிறார் ஏஆர் ரஹ்மான். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழக அரசு ரூ 10 கோடியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் தன் பங்களிப்பாக 25ஆயிரம் டாலர்களை, பாடகர் சீனிவாசுடன் இணைந்து வழங்கியுள்ளார். கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த அக்டோபர் 20-21 தேதிகளில் ரஹ்மானின் இசைக் கச்சேரி நடந்தது. தமிழ் பாடல்கள் கச்சேரி 21-ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரண்ட பணத்தில் ஒரு பகுதியாக 25 ஆயிரம் டாலர்களை (ரூ16.22 லட்சம்) ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதிக்காக வழங்கினார் ரஹ்மான். "இது ஒரு சிறு பங்களிப்புதான். ஆனால் உலகத் தமிழர்கள் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்," என்று ஏஆர் ரஹ்மான் தெரிவித்தார்.

Message reputation : 100% (2 votes)
FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES