ஜனவரி-12 பாலகிருஷ்ணாவுக்கு சென்டிமென்ட் தேதி?

avatar
ஜனவரி-12 பாலகிருஷ்ணாவுக்கு சென்டிமென்ட் தேதி? Balakrishna-photos-07-29-1509261537

ஐதராபாத்: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படம் 'ஜெய்சிம்ஹா'. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை நாயகியாக நடிக்க, ஹரிப்ரியா, நடாஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 1-ம் தேதி வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமிபுத்ர சதகர்னி' படம் கடந்த ஜனவரி 12-ம் தேதி வெளியானது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததையடுத்து தமிழிலும் டப் செய்து வெளியிட்டனர். தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கில் பெற்ற வெற்றியால் பாலகிருஷ்ணா உற்சாகமானார். அந்தப் படத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடித்திருக்கும் 'ஜெய்சிம்ஹா' படத்தையும் 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியிடுவதாக தற்போது தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணாவின் சென்டிமென்ட் படத்தின் ரிலீஸ் தேதி வரைக்கும் நீள்கிறது.

Message reputation : 100% (1 vote)
FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES