சேம் ஸ்வீட்டா.. சென்னைத் தமிழா.. - 2.0 பாடல்கள் எப்படி இருக்கு?

avatar
சென்னை : ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் '2.O' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று நள்ளிரவு துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டன. படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் நிலையில் இரண்டு பாடல்கள் மட்டுமே தற்போது வெளிவந்துள்ளன. அந்த பாடல்களை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்... https://www.saavn.com/s/album/tamil/2.0-2017/1fqzhEhemw0_ இந்தப் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். 'எந்திரன்' போலவே டெக்னிக்கல் வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது பாடல் வரிகள்.

நேற்று நள்ளிரவில் துபாய் அதிர அதிர ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் வெளியிடப்பட்டன. 40 கோடி ரூபாய் செலவில் ப்ரொமோஷன் வேலைகள் செய்யப்பட்டதாகத் தகவல் பரவியதால் எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருந்தது. இசை வெளியீட்டுக்கு சற்று முன்பு படத்தின் பாடல் லீக்காகி வாட்ஸப்பில் பரவியது குறிப்பிடத்தக்கது. மதன் கார்க்கியின் மயக்கும் வரிகளில் உருவாகியிருக்கிறது 'எந்திர லோகத்து சுந்தரியே' பாடல். இந்தப் பாடலை சித் ஶ்ரீராம் மற்றும் சாஷா திரிபாதி இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் 'எந்திரன்' படத்தின் பாடல்களைப் போலவே சயின்டிஃபிக் டெக்னிக்கல் வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் இடையே சூப்பர்ஸ்டாரின் ஐகானிக் சிரிப்பும் இடம்பெற்றுள்ளது.

சேம் ஸ்வீட்டா.. சென்னைத் தமிழா.. - 2.0 பாடல்கள் எப்படி இருக்கு? 28-1509167387-2-0-movie-press-meet-in-dubai-1509165107130

சேம் ஸ்வீட்டா...

இந்தப் பாடல் கேட்கும்போது 'எந்திரன்' படத்தில் வைரமுத்து வரிகளில் உருவான 'இரும்பிலே ஒரு இருதயம்' பாடலை நினைவு படுத்துகிறது. அந்தப் பாடல் வரிகளை சிட்டி ரோபோவுக்கு சனா ஐஸ்வர்யா ராய் மேல் உருவாகும் காதலை வைத்தயெழுதியிருப்பார் வைரமுத்து. துள்ளல் இசையோடு வெளிவந்த அந்தப் பாடல் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. '2.O' பாடலில் அந்தப் புதுமை மிஸ்ஸாவது போல நினைக்க வைப்பது சற்று சறுக்கல். சித் ஶ்ரீராம் குரல், மென்மையான மெஷின் வாய்ஸுக்கு அப்படியே பொருந்திப் போகும் சாஷாவின் குரல் என பெர்ஃபெக்ட் சாய்ஸ். யார் எதற்குச் சரியாக வருவார்கள் என இசைப்புயலுக்குத் தெரியாதா

ராஜாளி நீ காலி...

மதன் கார்க்கியின் வரிகளில் ப்ளேஸ், அர்ஜுன் சாண்டி, சித் ஶ்ரீராம் குரலில் உருவாகியிருக்கும் பாடல் ராஜாளி. 'ஐசக் அசிமோ பேரன்டா...' என எந்திரன் படத்தின் 'சிட்டி சிட்டி ரோபோ...'வில் பயன்படுத்தப்பட்ட விஞ்ஞானியின் பெயரோடு துவங்குகிறது இந்தப் பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினரின் அதிரவைக்கும் இசையோடு காதுகளில் புகுந்து கிறுகிறுக்க வைக்கிறது பாடல்.

ராஜாளி பாடலுக்கு தியேட்டர் தெறிக்கப்போவது உறுதி. ராப் ஸ்டைலில் உருவாகியிருக்கிறது இந்தப் பாடல். படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் காட்சியின் பிரமாண்டத்தை இசை ஒலியின் மூலமே உணரமுடிகிறது. இந்தப் பாடலின் லிரிக்ஸை கொஞ்சம் சென்னைத் தமிழ் கலந்து உருவாக்கியிருக்கிறார் மதன் கார்க்கி.

ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கமான இசைத் துல்லியத்தோடு வெளியாகியிருக்கிறது இந்தப் பாடல். சயின்டிஃபிக் கதைக்கு ஏற்ற விதத்தில் செமையாக ரசிக்கப்படும் வகையில் உருவாகியிருக்கிறது இரு பாடல்களும். வெளிவரப்போகும் இன்னொரு பாடல் மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. அந்தப் பாடல் என்ன ஸ்டைலில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனாலும், ரஜினி- ஷங்கர் கூட்டணியில் வெளிவரும் ரஹ்மானின் இசையில் குறையிருக்காது என உறுதியாக நம்பலாம்.

Message reputation : 100% (1 vote)
FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES