LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

Administrator••• 1
avatar

Films on India
avatar

Films on India


29/10/2017, 5:18 pm

துபாய்: ரஜினியுடன் இணைய 11 ஆண்டுகள் நான் காத்திருந்தேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். 2.ஓ இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசுகையில், "இந்தப் படம் 'எந்திரன்' படத்தின் தொடர்ச்சி அல்ல. இது வேறொரு கதைக் களம். உலகளாவிய ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறேன். பெரிய கற்பனை நமக்கு பரிச்சயமான டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 போன்றவர்கள் எல்லாம் இக்கதையில் வருவார்கள். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே '2.0'. அக்கற்பனை என்னை எங்கெல்லாம் இழுத்துக் கொண்டு போனதோ அங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

ரஜினிக்காக 11 ஆண்டுகள் காத்திருந்தேன் - இயக்குநர் ஷங்கர் 29-1509258558-2pointo-shankar

ரிஸ்க் எடுத்த ரஜினி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது கூட, டெல்லியில் 47 டிகிரி வெயிலில், 12 கிலோ எடையுள்ள உடையை போட்டுக் கொண்டு நடித்துக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பேட்மேன், சூப்பர்மேன் மாதிரியான உடை அது. இந்திய சினிமாவில் அந்த மாதிரி உடைகள் வந்ததில்லை. 4 மணிநேரம் அதே போன்று திருக்கழுக்குன்றத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அனிமேட்ரானிக்ஸ் காட்சிகளுக்காக 4 மணி நேரம் மண்ணிற்குள் இருந்தபடி நடிக்க வேண்டும். அதையும் பிரமாதமாக செய்துக் கொடுத்தார். அதான் ரஜினி இவ்வளவு வருடங்கள் நடித்த பிறகும் கூட, இப்போதும் என்ன காட்சிகள் எடுத்தாலும், அக்காட்சியில் இதுவரை செய்யாத மாதிரி நடிக்க வேண்டும் என்று மெனக்கிடுவது ரஜினி சாரிடம் பாராட்டுக்குரிய விஷயம்.

11 ஆண்டுகள் சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா, படம் பண்ணலாம் என்று பேசிப் பேசி 11 வருடங்கள் கழித்துதான் அது சாத்தியமானது. இப்போது அவருடன் 3 படம் செய்து விட்டேன். இன்னும் 3 படங்கள் செய்திருக்கலாம் ஒருமுறை கதை விவாதத்திற்காக கூர்க்கில் இருக்கும் போது, ஒரு குடும்பத்தினர் வந்தார்கள். "நீங்கள் 10 வருடம் முன்பு பிறந்திருக்கக் கூடாதா" என்றார்கள். "ஏன்?" என்றவுடன் "இன்னொரு 3 படம் ரஜினி சாரோடு செய்திருப்பீர்களே," என்றார்கள்.

Message reputation : 100% (1 vote)
ரஜினிக்காக 11 ஆண்டுகள் காத்திருந்தேன் - இயக்குநர் ஷங்கர்

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum