’பள்ளிப் பருவத்திலே’ நிச்சயம் தேசிய விருது வாங்கும் - வாசுதேவ் பாஸ்கர் நம்பிக்கை!

Film Motion
’பள்ளிப் பருவத்திலே’ நிச்சயம் தேசிய விருது வாங்கும் - வாசுதேவ் பாஸ்கர் நம்பிக்கை! 5d5570902b77d9ed34b244cd7a1b58b0

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டி.வேலு தயாரிக்கும் படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா , கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றும் பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, இ.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.

வினோத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஜய் நாராயனன் இசையமைத்துள்ளார். இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். வைரமுத்து, வாசு கோகிலா, எம்.ஜி.சாரதா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்திற்கு சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். தினா நடனம் அமைக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள வாசுதேவ் பாஸ்கர் படம் குறித்து கூறுகையில், “ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான் தெய்வத்தையே சொல்லிருக்காங்க ஆரம்பக்காலத்துல இருந்து. மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்குப் பிறகு குருவான ஆசிரியர்களுடன் தான் அதிகம் இருந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் அமையும். அப்படிப்பட்ட கதைக்கருவை கொண்ட படம் தான் இந்த ‘பள்ளிப் பருவத்திலே’.

ஒரு ஆசிரியரால் தான் ஒரு மாணவனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்தப் படத்தில் கூறியுள்ளேன். இத்திரைப்படம் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்மாக வெளியிடுகிறோம் ஆசிரியர்களுக்கு மணிமகுடமாக அமையும். கிராமத்துக்கு சென்று எப்படி டாக்டர் சேவை செய்வதை பற்றி ’தர்மதுரை’ படத்தின் மூலம் கூறி தேசிய விருது பெற்றதோ அதுபோல், இத்திரைப்படமும் ஆசிரியர்கள் பற்றிய பெருமையை கூறி தேசிய விருது பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

இப்படம் இம்மாதம் 15 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES