மான்விழி கொண்ட மங்கையர் - சாமுத்திரிகா லட்சணம்

Film Motion
மான்விழி கொண்ட மங்கையர் - சாமுத்திரிகா லட்சணம் 09-1512812543-eyes-anushka

சாமுத்திரிகா லட்சணம்: மான்விழி கொண்ட மங்கையர் எப்படியிருப்பார்கள்?- வீடியோ
சென்னை: மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். சாமுத்திரிகா சாஸ்திரம் மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளது. சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

சாமுத்திரிகா லட்சணம் பற்றி பாக்யராஜ் படங்களில் அதிகம் கேட்டிருப்போம். பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகைப் பெண்கள் என்றும் எந்த வகைப் பெண் எப்படி இருப்பார் எதிலிருந்து எதுவரை அழகாக இருப்பார் என்று வர்ணிப்பார் பாக்யராஜ். ஆனால் அவருக்கு அமையும் மனைவியோ நேர் எதிராக இருக்கும் அது வேறு விசயம், தலையெழுத்து படிதானே நடக்கும்.

அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அந்த முகத்திற்கு அழகு சேர்ப்பவை கண்கள். கண்களின் அமைப்பு, புருவங்களை வைத்து ஒரு பெண்ணின் அமைப்பை கூறுகிறது சாமுத்திரிகா சாஸ்திரம். ஒரு சில பெண்களுக்கு உருண்டையாக கண்கள் இருக்கும். ஒரு சிலருக்கு கண்கள் கவர்ச்சியை தரும். எந்த கண்களை உடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம்.

வில்லென வளைந்த புருவம்:

இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

நீண்ட கண்கள்:

பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.

நேர்மறை எண்ணம்:

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.

கண்களின் அமைப்பு:

உருண்டை விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

இடுங்கிய கண்கள்:

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள். உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள்.

அப்பாவிகள்:

உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள். சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே... அதுபோல இருப்பார்கள்.

பயங்கர பின்னணி:

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சாமுத்திரிகா சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES