LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

New Member••• 1
Film Motion

Film Motion
Film Motion

Film Motion


7/12/2017, 4:54 am

நாங்கள் தயாரித்த படங்களிலேயே ‘அருவி’ தான் பெஸ்ட் - எஸ்.ஆர்.பிரபு பெருமிதம் 9b70ee000b29f2af1a3c4d991e6903c0

’சகுனி’, ‘காஸ்மோரா’, ‘ஜோக்கர்’, சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘தீரன் அதிகாரன் ஒன்று’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘அருவி’.

பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் இம்மாதம் வெளியாக உள்ளது. இதனை அறிவிப்பதற்காக இன்று அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைப் பெற்றது.

இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன், இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத்தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன்? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இயக்குநர் சக்தி சரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9 மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு அவர் கதையை கூறினார். நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர்.

அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா? அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா? என்று கேட்டேன். சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது.” என்று தெரிவித்தார்.

இயக்குநர் அருண் பிரபு பேசுகையில், “அருவி மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி.’ என்றார்.
நாங்கள் தயாரித்த படங்களிலேயே ‘அருவி’ தான் பெஸ்ட் - எஸ்.ஆர்.பிரபு பெருமிதம்

On: 'FILMS OF INDIA'

You cannot reply to topics in this forum