ஆர்கே நகரில் விஷால் வேட்புமனு நிராகரிப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Film Motion
ஆர்கே நகரில் விஷால் வேட்புமனு நிராகரிப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு Xec1-05-1512497334.jpg.pagespeed.ic.uwmfpolyxD

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் திடீர் திருப்பமாக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார். தேர்தல் ஆணையத்துடனான ஆலோசனைக்குப் பின்னர் தேர்தல் அதிகாரி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால் அதன் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்மொழிந்தவர்களின் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய மனுவை ஏற்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் முன்மொழிந்தவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனனால் மிரட்டப்பட்டதாக ஒரு ஆடியோவையும் விஷால் வெளியிட்டார். இதனை தேர்தல் அதிகாரியிடமும் அவர் அளித்தார். அடுத்த 5வது நிமிடத்தில் வெளியே வந்த நடிகர் விஷால் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றார். நாளை முதல் களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். இதையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விஷாலின் மனுவை முன்மொழிந்த 10 பேரில் 2 பேரின் கையெழுத்து போலியாக உள்ளதால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மனு ஏற்கப்பட்டதாக அறிவித்து பின்னர் ஏன் நிராகரித்தார்கள் என தெரியவில்லை; சுயேட்சை ஒருவரை ஆதரித்து வெற்றி பெற வைப்பேன் என கூறியுள்ளார்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS
Film Motion
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேச்சை இளைஞரை ஆதரித்து வெற்றியடையச் செய்வேன். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் அதிகாரி என்னுடைய மனு ஏற்கப்பட்டதாக சொன்னதற்கான வீடியோ என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் அறிவித்ததை கேட்டு அனைவரும் கைதட்டி வரவேற்றனர். மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைக்கவில்லை. படத்தில் நடப்பது போல நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா?

கடந்த முறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது, இந்த முறை ஆட்களையே தூக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக போயுள்ளது. டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டாக இன்று நடந்துள்ளது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எதற்காக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது என புரியவில்லை. என்னைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும். முன்மொழிந்தவரை மிரட்டியது மதுசூதனன் ஆட்களா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.

முன்மொழிந்தவர்கள் இரண்டு பேரின் வீட்டின் முன்பு ஆளும்கட்சியின் ஆட்கள் இருந்து கொண்டு மிரட்டுகின்றனர். சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை ஆதரித்து அவரை வெற்றியடையச் செய்வேன். நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்.
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES