சசி கபூர் உடல் தகனம் - கொட்டும் மழையில் திரைப் பிரபலங்கள் இறுதி அஞ்சலி!

Film Motion
சசி கபூர் உடல் தகனம் - கொட்டும் மழையில் திரைப் பிரபலங்கள் இறுதி அஞ்சலி! 05-1512474323-shashi-kapoor

மும்பை : மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் சசி கபூரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் பாலிவுட் திரைப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

1970 - 80ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் காதல் படங்களில் நடித்துக் கொடிகட்டிப் பறந்தவர் சசி கபூர். 1938-ல் பிறந்த இவர், 4 வயதில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் நுழைந்தார். 'தர்மபுத்ரா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், 'தீவார்', 'சில்சிலா', 'சத்யம் சிவம் சுந்தரம்' உள்ளிட்ட 160-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர், மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை சசி கபூர் காலமானார். பின்னர் அவரது உடல் மும்பையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தியத் திரையுலகின் பல பிரபலங்கள் ட்விட்டரில் சசி கபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அவர் பாலிவுட் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை எனப் பலர் புகழஞ்சலி செலுத்தினர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், சயீப் அலிகான், அனில் கபூர், சஞ்சய் தத், நஸ்ருதீன் ஷா, ரன்பீர் கபூர், ரன்தீர் கபூர், ரிஷி கபூர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கொட்டும் மழையிலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையிலும் முன்னணி நடிகர்கள் குடையுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சசி கபூருக்கு 2011-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2015-ம் ஆண்டு சினிமா உலகில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சசி கபூருக்கு குணால் கபூர், கரண் கபூர், சஞ்சனா கபூர் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES