டாப் டென் கலெக்‌ஷனில் அஜித் படங்களின் இடம் இதோ!

Film Motion
சென்னை: சென்னையின் பிரபல திரையரங்கான வெற்றி சினிமாஸில் கடந்த 5 ஆண்டுகளில் வசூல் குவித்த படங்களின் டாப் டென் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பட்டியலில் 2012-ல் வெளியான அஜித்தின் 'பில்லா 2' படம் டாப் டென் வரிசையில் ஏழாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. 2013-ல் 'ஆரம்பம்' திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

2014-ல் வெளியான 'வீரம்' ஐந்தாவது இடத்தை விஜய்யின் 'ஜில்லா' படத்தோடு பகிர்ந்து கொண்டுள்ளது. 2015-ல் வெளியான 'வேதாளம்' திரைப்படம் வசூல் குவித்து டாப் டென் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. 2016-ல் அஜித் படம் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் வருடத்தின் டாப் 1 இடத்தில் எந்த அஜித் படங்களும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் மூன்றாவது இடம் பிடித்ததே அஜித் படங்களின் அதிகபட்ச சாதனையாகப் பதிவாகி இருக்கிறது. இந்த மதிப்பீடு வெற்றி தியேட்டரின் வசூல் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES