கமல் பிறந்த நாள் எங்க எல்லாருக்குமான பிறந்தநாள்! - மனோபாலா

Admin
கமல் பிறந்த நாள் எங்க எல்லாருக்குமான பிறந்தநாள்! - மனோபாலா 07-1510036471-kamal-manobala9

கமலை பற்றி பேச ஆரம்பித்தால் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறார் மனோபாலா. பேசிக்கொண்டிருக்கும்போதே தனக்கு வாழ்க்கை கொடுத்தவரே கமல்தான் என்றும் நெகிழ்கிறார்.

"அவர்தான் என் கேரியருக்கே அஸ்திவாரம் போட்டது. பாரதிராஜாவிடம் என்னை கூட்டிப்போய் அசிஸ்டெண்டாக சேர்த்துவிட்டதே கமல் தான். நான், சந்தானபாரதி, பிசி ஸ்ரீராம், மணிரத்னம், வாசு, ராபர்ட் ராஜசேகர் எல்லோரும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த கடுமையான காலகட்டம் அது. எங்களை ஆழ்வார்பேட்டை கும்பல் என்றுதான் அழைப்பார்கள். அப்போது கமல் வீடு தான் எங்களுக்கு சரணாலயம் மாதிரி. முக்கியமாக நானும், சந்தானபாரதியும் அவர் வீட்டிலேயே தான் வள்ர்ந்தோம்.

அப்ப அவர் வளர்ந்துகிட்டு இருக்கற ஒரு ஹீரோ. எங்களோட கஷ்டங்களை நல்லா புரிஞ்சு வெச்சுகிட்டு எங்களை பார்த்துகிட்டவர் அவர். தீபாவளி, பொங்கல்னா அவர்தான் எங்களுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுப்பார். அப்படி கொடுக்கும்போது ட்ரெஸ்க்குள்ள பணம் இருக்கும். சிகப்பு ரோஜாக்கள் ஷூட்டிங் முடியும் கட்டத்தில் என்னை பாரதிராஜாவிடம் அழைத்து சென்று நீ இவரிடம் சேர்ந்தால் பெரிய ஆளாகிவிடலாம் என்று சொன்னதோடு பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்டதும் அவர்தான். கமல்தான் எல்லாம் என் வளர்ச்சிக்கு. எங்களுக்கு நிறைய நூல்களையும், வெளிநாட்டு படங்களையும் அறிமுகம் செய்து வைத்தவர் அவர்தான். எங்களோட சினிமா ஆசையை வளர்த்தவர் அவர். எனக்கு பெர்சனலாக என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் அவர் தான்.

நடித்திருக்கிறேன். நிறைய படங்களுக்கு அவர் கைகளால் ஷீல்டு வாங்கியிருக்கேன். அதற்கு பிறகு பம்மல் கே.சம்பந்தம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு என் உடல்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போனது. இப்போது அதற்காக ஏங்குகிறேன். கமல் இல்லாவிட்டால் நாங்கள் யாருமே இல்லை. அவரோட ஒவ்வொரு பிறந்தநாளையும் எங்களோட பிறந்தநாளாகவே கொண்டாடுவோம்.

19 வயதில் அவருடன் பழக ஆரம்பிச்சேன். இப்போது அவருக்கு 60 வயது. கமல் சார் கிடைச்சது என் பாக்கியம். என்னை அவர் எதிர்பார்த்தது வேற. நான் கமர்சியல் படங்கள் பண்ணினது கமல் சாருக்கு பிடிக்கலை. அதுகுறித்து அவர் எனக்கு எழுதிய கடிதத்தை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.''

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES