கமல் கட்சிக்கு நிதி கொடுக்கப்போகிறாரா? - ஆர்.பார்த்திபன் சூசகம்!

Admin
கமல் கட்சிக்கு நிதி கொடுக்கப்போகிறாரா? - ஆர்.பார்த்திபன் சூசகம்! 07-1510057059-kamal-parthiben65

சென்னை: நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நேரடி அரசியலில் இறங்க ஆயத்தமாகி வரும் நிலையில், அதன் ஒரு தொடக்கமாக மக்களுக்குப் பயன்படும் செயலிகளை இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் புதிய செயலிகளை அறிமுகப்படுத்தினார். #kh, #theditheerpomvaa, #maiamwhistle, #vituouscycle ஆகிய பெயரில் செயலிகளை அறிமுகப்படுத்தினார்.

நேற்று மழையில் முளைத்த காளான் அல்ல - ரசனை முளைக்கக் காரணங்களில் ஒன்று கமல் என்ற கலைமழை! இருவிதழ்களுக்கிடையே சிறு முத்தமாய் அந்'நன்றி'! என இன்று காலை கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லியிருந்தார் நடிகர், இயக்குநர் ஆர்.பார்த்திபன்.

.........கொடுத்தேன், கை கொடுக்கிறேன், .........கொடுப்பேன் !

இந்நிலையில், இந்த செயலி அறிமுக நிகழ்ச்சி முடிவடைந்ததும், கமலைச் சந்தித்து கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகர் பார்த்திபன். இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பார்த்திபன், '....கொடுத்தேன், கை கொடுக்கிறேன், .....கொடுப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். பார்த்திபன் எப்போதும் எதைச் சொன்னாலும் சூசகமாகச் சொல்வதே வழக்கம்.

இதன்மூலம் கமல் தொடங்கவிருக்கும் கட்சிக்காக மக்களிடம் கேட்ட நிதியைத் தான் அளித்து தொடங்கிவைக்கவிருப்பதாகச் சொல்கிறாரா என ரசிகர்கள் கருதுகிறார்கள். அதற்காகத்தான் கமலைச் சந்தித்து ஆதரவு கொடுத்துவிட்டு, '..... கொடுப்பேன்' என சூசகமாகச் சொல்லியிருக்கிறாரோ?

நிதி தருவதைச் சொல்கிறீர்களா? இடைப்பட்ட வரி மட்டும் தெளிவாய் விளங்க, கொடுத்ததும் ஏறக்குறைய விளங்க, கொடுக்கவிருப்பது தனமோ என குழப்பம்..!

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES