இந்து தீவிரவாதம்- நடிகர் கமல்ஹாசன் மீதான உ.பி. வழக்கு விசாரணை நவ.22-க்கு ஒத்திவைப்பு

Film Motion
வாரணாசி: இந்து தீவிரவாதம் என விமர்சித்த நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேசத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்து தீவிரவாதம் குறித்து வார இதழில் கமல்ஹாசன் எழுதிய கட்டுரை சர்ச்சையாக வெடித்திருக்கிறது. பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கமல்ஹாசனை சாடி வருகின்றனர்.

தமிழக அமைச்சர்களும் பாஜகவைப் போலவே நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும் என வெறித்தனமாக பேசியிருந்தார். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதன் மீதான விசாரணை நவம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS
Film Motion
சென்னை: இந்து தீவிரவாதம் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆதரவு தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் கருத்துக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், அரவிந்த் சாமி ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளோ கமல்ஹாசனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு இருக்கின்றன. இதற்காக கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நகைச்சுவை நடிகர் கருணாகரனும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள், டிவி சேனலில் நேரலையாக விவாதம் நடத்தி அவர் கூறியது தவறு என நிரூபிக்கட்டும் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

FILMS OF INDIA | SPONSORED CONTENTS

Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES